மழைக் காலத்தில் நோய்களிலிருந்து கோழிகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
கோழிப் பண்ணை. (பைல் படம்)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மழை மற்றும் குளிர்காலங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை ஒரு இடத்தில் பராமரித்தல் போன்ற காரணங்களால் கோழிகளுக்கு அவிபோக்ஸ் வைரஸ் (Avipoxvirus) தடுப்பூசி வைரஸ் (vaccination virus) போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
இதிலிருந்து கோழிகளை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள்:
இயற்கை உணவுகளை அதிகம் கொடுத்தல்:
கீரை வகைகளான முருங்கை கீரை, பொன்னாங்காணி, பிரண்டை, குப்பைமேனி போன்றவற்றை காலை உணவுடன் சேர்த்து கோழிகளுக்கு வழங்கலாம். இதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட நோய்கள், மற்றும் முட்டை இடும் விகிதம் பாதிப்படைதல் போன்ற பிரச்சினைகளை குறைக்க முடியும்.
கோழிகளுக்கு வாரம் ஒரு முறை இஞ்சி, மஞ்சள், மிளகு, உள்ளி, வேப்பிலை, சின்ன வெங்காயம் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பதார்த்தங்களை நீரில் கலந்து காலையில் கொடுக்கலாம்.
இதனால் கோழிகளுக்கு வரும் அனைத்து நோய்களையும் முற்கூட்டியே தடுக்கவும், உற்சாகத்துடன் வைக்கவும் தூண்டும்.
கலக்க வேண்டிய விகிதம்: (30 கோழிகளுக்கு)
இஞ்சி- 250 கிராம், மஞ்சள்- 50 கிராம், இரண்டு கைப்பிடி வேப்பிலை, சின்ன வெங்காயம் 250 கிராம், மிளகு- 50 கிராம்என்ற விகிதத்தில் கலந்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து வைக்க வேண்டும்.
இரவு 7 மணிக்கு பிறகு நீர் பாத்திரங்களை கூட்டை விட்டு அகற்றி விடுதல். குளிர் அதிகமாக இருப்பதுடன் குளிர் காற்றும் வீசுவதால் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் மூலம் கூடுகளின் உள் ஈரப்பதன் அதிகமாகி சளி தொற்று ஏற்படும்.
அடிக்கடி கோழிகளையும் கூடுகளையும் பார்வையிடுங்கள்:
வருத்தம் ஏற்பட்ட கோழிகள் உடனடியாக அறிகுறிகளை காட்டாது. பின்புதான் மாற்றங்கள் தெரியும். அதற்குள் மற்ற கோழிகளுக்கு நோய்கள் பரவி விடும். நோய் ஏற்படும் கோழிகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். முன்பு கூறிய இயற்கை பதார்த்த நீரை கலந்து கொடுக்க வேண்டும்.
அதிக கோழிகளை நெருக்கமாக ஒரே கூண்டில் அடைக்காதீர்:
அதிகமான கோழிகள் ஒன்றாக இருந்தால் நோய்கள் விரைவில் மற்ற கோழிகளுக்கு ஒன்றுக்கு ஒன்று பரவும்.
கூண்டுக்குள் நீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளுங்கள்:
சிறிய குஞ்சுகளை வைத்திருக்கும் கூண்டுகளை அடிக்கடி சுத்தம் செய்து, குளிரின் அளவுக்கேற்ப வெப்பத்தை கூட்டிக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
கூடுகளில் உட்புறமாக ஈரப்பதத்தை முடிந்தவரை உடனடியாக நீக்க முயற்சி செய்ய வேண்டும்.
இந்த முயற்சிகள் கோழிகளை நோயிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu