வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் கிசான் ரயில் சேவைகள்

வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் கிசான் ரயில் சேவைகள்
X
கிசான் ரயில் மூலம் சிறு விவசாயிகள், மிகப் பெரிய சந்தைகளுக்கு தங்கள் பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும்.

கிசான் ரயில்கள் 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது, அதன்படி கிசான் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது.

இதன் மூலம் அழுகக் கூடிய காய்கறி, பழங்கள், மாமிசம், கோழி, மீன் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து தேவையுள்ள இடங்களுக்கு இப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

கிசான் ரயில் சேவைகள், தேவை அடிப்படையிலானது. தொலை தூரங்களில் உள்ள மிகப் பெரிய சந்தைக்கு வேளாண் பொருட்களை கொண்டு செல்ல, கிசான் ரயிலை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இந்த ரயலில் வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்கு பதிவு செய்வதில் குறைந்த பட்ச வரம்பு கிடையாது, என்பதால் இதன் மூலம் சிறு விவசாயிகள், மிகப் பெரிய சந்தைகளுக்கு தங்கள் பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்