விவசாயிகள் கவனத்திற்கு, 70% மானியம் பெற ஏமாற வேண்டாம்..!

விவசாயிகள் கவனத்திற்கு, 70% மானியம் பெற ஏமாற   வேண்டாம்..!
X
சில மோசடி இணையதளங்கள் மூலம், இத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து பணம் மற்றும் தகவல்களை சேகரிப்பது தெரிய வந்துள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க, விவசாயிகளுக்கு 70% சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை பெற்று தருவதாக கூறி, இணைய தளம் மூலமும், தனியாகவும் பணம் வசூல் செய்து சிலர் ஏமாற்றுகின்றனர். இத்தகைய மோசடிகளில் ஏமாற வேண்டாம் என விவசாயிகளை தமிழக அரசு அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது:

மாநில அரசின் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீத நிதி உதவி மற்றும் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பிரதம மந்திரி விவசாயிகள் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு (PM-KUSUM) திட்டத்தின் கீழ் 30 சதவீத நிதி உதவியுடன் மொத்தம் 70 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரைத் திறன் வரையிலான பம்பு செட்டுகள் அரசால் அமைத்து தரப்படுகிறது.

* இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான போர்ட்டல்' வலைதளங்கள் என்று பொய்யான சில மோசடி இணையதளங்கள் மூலம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து பணம் மற்றும் தகவல்களை சேகரிப்பது தெரிய வந்துள்ளது.

* புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) மூலம் கடந்த காலங்களில் இது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த திட்டத்திற்கு என் எந்தவொரு பதிவுக் கட்டணத்தையும் டெபாசிட் செய்யவோ அல்லது பொய்யான வலைதளங்களில் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் பகிரவோ வேண்டாம் என்று பொது மக்களுக்கு / விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் மீதான புகார்களை பெற்றவுடன் தவறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் பல போலி பதிவு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

* மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து தருவதாக போலி இணையதளங்கள் மட்டுமின்றி, வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களிலும் பயனாளிகளை தவறாக வழி நடத்த பயன்படுத்தப்படுகின்றன . PM-KUSUM திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு முன் இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

* PM-KUSUM திட்டத்திற்கான பதிவு போர்ட்டல் எனக் கூறும் Whats App/ SMS: மூலம் பெறப்படும் சரிபார்க்கப்படாத அல்லது சந்தேகத்திற்குரிய இணையத்தளத்திற்கான லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

* புதிய மற்றும் பிதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) இணைய தளம் www.mnre.gov.in மற்றும் மாநில அரசின் இணையதளம் https://pmkusum.tn.gov.in https://mis.aed.tn.gov.in https://www.aed.tn.gov.in மூலம் மட்டுமே பதிவு மற்றும் திட்டம் பற்றிய தகவல்களுக்கு அணுக வேண்டும்.

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகவல்களுக்கு:

MNRE D60600TW JOITUDITOOT https://mnre.gov.in PM-KUSUM 60W போர்ட்டல் https://pmkusum.mnre.gov.in - ஐப் பார்வையிடவும் அல்லது டோல் டயல் செய்வதற்கான இலவச எண். 1800-180-3333,

மாநில அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை இணையதளம். https://pmkusum.tn.gov.in https://mis.aed.tn.gov.in https://www.aed.tn.gov.in

ஆகியவற்றை பார்க்கலாம்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு