வேளாண்துறை சார்பில் ஆவிக்கோட்டை கிராமத்தில் உழவர் வயல் தினவிழா

வேளாண்துறை சார்பில் ஆவிக்கோட்டை  கிராமத்தில் உழவர் வயல் தினவிழா
X

வேளாண்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். 

Farmer's Field Day Festival தமிழக வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு கருத்தரங்குகள், செயல் விளக்க காட்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஆவிக்கோட்டை கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் உழவர் வயல் தின விழா நடந்தது.

Farmer's Field Day Festival

வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா ஆவிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

பயிற்சியில் ஆவிக்கோட்டை கிராமத்தை சார்ந்த முன்னோடி விவசாயி குணசேகரன் தென்னையில் இயற்கை முறையில் சாகுபடி செய்தல் குறித்த தனது அனுபவத்தினை விவசாயிகளிடம் தெரிவித்தார்.

இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் ,உளுந்து மற்றும் தேங்காய் போன்ற பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் பெறுவதோடு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Farmer's Field Day Festival


ஆவிக்கோட்டை கிராமத்தில் வேளாண் துறை சார்பில் உழவர் வயல்தினவிழா விளக்க கருத்தரங்கு நடந்தது.

வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் இயற்கை இடுபொருட்களான மீன் அமிலம் தயாரித்தல், அமிர்தகரைசல் தயாரிப்பு, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.மேலும் பாரம்பரிய நெல் சாகுபடியினை இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் செலவினம் முற்றிலும் குறைக்கப்பட்டு நெஞ்சில்லா உணவினை அனைவருக்கும் கிடைத்திடவும். பாரம்பரிய நெல் ரகங்கள் அழிவிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யாமணி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் வேளாண்மை அலுவலர் சப்தகிரி வாசன் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் .அருள்மரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil