விலக்கு அளிக்கப்பட்டதால் கோடை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

விலக்கு அளிக்கப்பட்டதால்  கோடை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
X
ஊரங்கில் விலக்கு அளிக்கப்பட்டதால் விவசாயிக் கோடை சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை காலத்தில் விவசாயிகள் முன்பட்ட குறுவைசாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறுகட்டுபாடுகள் விதிக்கப்பட்டு 24ம்தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கி இருந்து விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வழக்கம்போல் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மங்கைநல்லூர், கழனிவாசல், பெரம்பூர் அரசூர் சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலத்தை சமபடுத்துதல், பாய் நாற்றங்கால் தயார் செய்தல், நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தடையில்லாமல் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன

Tags

Next Story