யூரியா-உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பங்கள்
பைல் படம்.
யூரியா-உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பங்கள் குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவிக்கையில், எந்த ஒரு பயிரையும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக வைப்பதில் யூரியா உரமே முதலிடம் வகிக்கிறது. எனவே விவசாயிகள் தேவைக்கு வைப்பதை விட்டுவிட்டு அதிக பச்சை கொடுப்பதற்காகவும், அதிக வளர்ச்சிக்காகவும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிற்கு மீறி யூரியா உரங்களை இடுகின்றனர்.
இது உரசெலவையும் அதிகரிக்கும். தேவையற்ற தீமை செய்யும் பூச்சிகளையும் பயிரை நோக்கி ஈர்க்கும். பூச்சிகளை கட்டுப்படுத்த மீண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
எனவே விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான யூரியா உரத்தை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம். நெல்லுக்கு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா மேலுரமாக இடப் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த யூரியா வினை நேரடியாக வயலில் இடாமல் ஒரு எளிய தொழில் நுட்பத்தின் மூலம் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான பொழுது சிறிது சிறிதாக உரமானது பயிருக்கு கிடைக்கும் வகையில் செய்ய இயலும். இதற்கு ஐந்து பங்கு யூரியா எனில் நான்கு பங்கு ஜிப்சம், ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொண்டு முதலில் யூரியாவையும் வேப்பம் புண்ணாக்கையும் கலந்து யூரியாவின் நிறம் மாறிய பின் ஜிப்சத்தினை கலந்து முதல் நாள் வைத்திருந்து மறுநாள் இடலாம்.
நேரடியாக யூரியா உரத்தை தெளிக்கும் பொழுது, நீரில் கரைதல் ஆவியாதல் போன்றவற்றின் மூலம் வீணாகிறது தெளிக்கும் யூரியாவில் 40 சதம் மட்டுமே பயிர் எடுத்துக்கொள்ளும். எனவே விவசாயிகள் ஐநது: நான்கு: ஒன்று தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய், சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது. ஜிப்சம் மேலுரை போல் செயல்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு சிறிது சிறிதாக பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்.
விவசாயிகள் நெருப்பை இருக்கு யூரியா விடும் பொழுது வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் லேசாக நீர் கட்டினால் போதுமானது. அதேபோல் காற்று மற்றும் மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது யூரியா உரம் இடுவதை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் யூரியா மிக எளிதாக ஆவி ஆகி சென்றுவிடும். பயிருக்கு கிடைக்காது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் யூரியா உரங்களை கொடுக்கும் போது யூரியா வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பயிரின் வேருக்கு அருகிலேயே உரமானது கிடைக்கும்.
எல்லாவற்றையும் விட அடிஉரமாக முக்கிய தொழுவரங்களை தேவையான அளவுக்கு இடுவதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்து வங்கியாக இவை செயல்பட்டு. பயிர் உர சத்துக்கள் எடுத்துக் கொள்ளும். எடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் யூரியாவை தனித்து விடாமல் வேப்பம் புண்ணாக்கு ஜிப்சத்துடன் கலந்து விட்டு உரம் வீணாவதை தவிர்க்கவும் தேவையற்ற உரம் இடுவதை கைவிடவும்.
இவ்வாறு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu